பொன்னேரி மருத்துவமனையில் சார ஆட்சியர் ஆய்வு.

பொன்னேரி அரசு மருத்துவமனையில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-08-29 04:00 GMT

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சார் ஆட்சியர் 

பொன்னேரி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை குறித்து சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் திடீர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் தினந்தோறும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சார் ஆட்சியருக்கு புகார்கள் வந்த நிலையில் திடீர் என மருத்துவமனையை ஆய்வு செய்தார்,

ஆய்வின்போது  மருத்துவமனையின் கட்டமைப்பு,புற நோயாளிகள் பிரிவு உள்நோயாளிகள் பிரிவு, சமையல் கூடம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார். அப்போது உள் நோயாளிகள் பிரிவில் பெண்கள் சிகிச்சை பெற்று வரும் பகுதிக்கு சென்று நலம் விசாரித்த போது இங்குள்ள சில முக்கிய சோதனைகளை வெளியே உள்ள மருத்துவமனைகளில் எடுத்து வரச் சொல்லி மருத்துவர்கள் வலியுறுத்தியதாகவும் அதனால் பணம் செலவு செய்து சில டெஸ்ட்களை வெளியே எடுத்து வந்ததாகவும் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சார் ஆட்சியார் ஐஸ்வர்யா ராமநாதன் அருகில் இருந்த மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் அசோகன் உள்ளிட்ட மருத்துவர்களை எதற்காக வெளியே டெஸ்ட் எடுக்க அனுப்பினீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு மருத்துவர்கள் மழுப்பவே மீண்டும் சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் டெஸ்ட்டுக்கு வெளியே சென்றீர்களா என கேட்க அவரும் ஆமாம் என உறுதி செய்தார்.

இதனையடுத்து சார் ஆட்சியர் மருத்துவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். இதனால் மருத்துவமனை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதார துறை துனை இயக்குநர் சேகர், பொன்னோரி நகராட்சி ஆணையர் கோபிநாத், நகராட்சி தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், வார்டு உறுப்பினர்கள் உமாபதி, நல்லசிவம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News