மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்

பொன்னேரியில் குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்

Update: 2024-06-09 04:00 GMT

கொலை சம்பவம் நடைபெற்ற பகுதி 

பொன்னேரியில் குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது. தன் மகள் வேறு ஒருவருடன் தகாத உறவில் இருப்பதை கண்டிக்காததால் தாய் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் விவேக் ( வயது 32). கூலி தொழிலாளியான விவேக்கிற்கும் இவரது அத்தையான லதா ( வயது 52) என்பவரது மகள் சௌமியாவிற்கும் கடந்த 3.ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன் - மனைவி இடையே பலமுறை அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் வேறு ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவில் சௌமியா தமது கணவரை பிரிந்து ஊரை விட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவேக் இது குறித்து தமது மாமியாரிடம் சென்று அவரது மகள் வேறு ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாகவும், மகளை ஏன் கண்டிக்கவில்லை என கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் லதா கழுத்தில் விவேக் பலமாக குத்தியுள்ளார். இதில் நிலை குலைந்து லதா சரிந்து கீழே விழுந்துள்ளார். லதாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லதாவை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே லதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரி காவல்துறையினர் லதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு சென்று மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் விவேக்கை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் தகாத உறவில் சென்றதை கண்டிக்காத தாயை, அவரது மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News