பொன்னேரி அருகே ஆந்திராவிற்கு ரயில் மூலம் கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

பொன்னேரி அருகே ஆந்திராவிற்கு ரயில் மூலம் கடத்த இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-12-26 05:48 GMT

பொன்னேரி அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கைது செய்யப்பட்ட நபருடன் போலீசார் உள்ளனர்.

அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே முட்புதரில் மறைத்து வைத்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2650கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக  ஒருவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில்  அரிசி, சர்க்கரை, கோதுமை, பச்சரிசி ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி வழங்கப்படும் அரியை கடத்தி வெளி மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்று விடுவதாக புகார்கள் வருகின்றன.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் அரிசி கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுகிறது என்றால் தலைநகர் சென்னையில் இருந்து அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இவற்றை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே ரேஷன் அரிசிபதுக்கி வைக்கப்பட்டு ஆந்திராவிற்கு கடத்தப்பட உள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே போலீசார்  சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 2650கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை  ரயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற குமார் என்பவரை கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News