அதானி துறைமுகம் அமைக்கப்பட்டபிறகு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது..!

பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் அமைக்கப்பட்டபிறகு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-08-14 04:15 GMT

அதானி துறைமுகம்.

திருவள்ளூர் மாவட்டம்,கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தின் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் ஏற்பட்ட கடல் அரிப்பை சரி செய்யும் விதத்தில் அதானி துறைமுகத்தினர் நடுக்கடலில் இருந்து சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து முறையாக அனுமதி பெறாமல் கடல் மண்ணை தூர்வாரும் இயந்திரத்தின் மூலம் எடுத்து கடல் நீரை குடிநீர் ஆக்கும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வெளியே கொட்டுகின்றனர்.

அதானி துறைமுகத்தினால் கடல் அரிப்பு ஏற்பட்டு அருகாமையில் கடலை ஒட்டி உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது

அதானி துறைமுகம் நடுக்கடலில் கற்களை கொட்டுவதனால் கடல் அரிப்பானது ஏற்பட்டு காட்டுப்பள்ளி கருங்காலி வைரவன் குப்பம் பழவேற்காடு லைட் ஹவுஸ் ஆகிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடல் அரிப்பு ஏற்பட்டு ஊருக்குள்ளேயே கடல் நீர் ஊருக்குள்ளேயே சூழல் ஏற்படும் இதனால் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலையும் செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாகவும் தங்களது படகுகள் வளைகள் அனைத்தும் கடலில் கடல் நீர் இழுத்துச் செல்வதாகவும் பாதிப்புக்கு உள்ள அடைவதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


இதனால் கடல் நீர் குடிநீர் சுத்திகரிப்பு மையமானது அமைக்கப்பட்டிருக்கிறது இது இந்த நிறுவனத்தின் உள்ளேயே கடல் நீர் உள்ளே புகுழுவதால் அந்த நிறுவனமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது இதனால் அதானி துறைமுகம் நடுக்கடலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு கற்கள் கொட்டியதால் அரிப்பானது ஏற்பட்டு கடல் நீர் குடிநீர் ஆக்கும் மையத்திற்குள்ளேயே தண்ணீர் வந்ததால் இவர்கள் அதானே துறைமுகமிடமிருந்து தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ட்ரேஜர் மூலமாக நடு கடலில் மணலை  எடுத்து இதை நிரப்பும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் சுற்றுச்சூழல் அமைப்பகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து முறையாக அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக மணல் அள்ளி நிரப்புவதால் கடல் அரிப்பானது ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள கடலின் கரையானது அறுக்கப்பட்டு கடலும் ஆறும் ஒன்றாக இணைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

உடனடியாக இதை அதானி துறைமுகம் வேறு வழியிலும்  ஸ்டார் கற்களை முழுவதுமாக அதானி துறைமுகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது இந்த கற்களையும் கடலில் கொட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது மணலை கொட்டும்போது இந்த அளவிற்கான பெரிய பாதிப்பு உண்டாகும் சூழலிலும் ஸ்டார் கற்கள் கூட்டுவதால் மிகவும் பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

உடனடியாக தமிழக அரசு  மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக இதனை மீனவர்களின் வாழ்வாதார நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags:    

Similar News