பொன்னேரி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

பொன்னேரி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார்.

Update: 2022-09-12 03:00 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூர் என்.எஸ்.கே.நகர் ராஜாதோப்பு தெருவில் வசித்து வருபவர் அழகர்சாமி. இவருக்கு திருமணமாகி பால சூர்யா என்ற மகன் உள்ளார்.

இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பால சூரியா தனது தாயுடன் உறவினர் வீட்டிற்கு பிறந்தநாளில் விழாவிற்காக சென்றார். அப்போது, நெடுஞ்சாலையில் வல்லூர் நான்கு வழி சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது பலமாக மோதியது.

இதில் நிலைத்தடுமாறி வாகனத்தில் இருந்து பாலசூர்யா கீழே விழுந்து. ,லாரி சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து தாய் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பால சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் கண் முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News