ஆரணி மல்லியின்குப்பம் ஊ.ஓ.தொ.பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா:எம்.எல்.ஏ பங்கேற்பு

School New Building Inaguration பொன்னேரி அருகே ஆரணி மல்லியின்குப்பம் ஊராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார். திறந்த பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் குத்துவலிக்கு ஏற்றி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.;

Update: 2023-12-27 07:30 GMT

முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த பள்ளி புதிய கட்டிடத்தின் தோற்றம். 

School New Building Inaguration

பொன்னேரி அருகே ஆரணி,மல்லியன்குப்பம்  பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி   பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம் ஆரணி  பேருராட்சி, அருகே உள்ள மல்லியன்குப்பம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் 22-23 நிதியாண்டின் குழந்தை நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹56லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் 4 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. ,புதிய கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாணவ, மாணவியருக்கு, இனிப்புகளை வழங்கி  பேசினார். 

School New Building Inaguration


புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ துரை சந்திரசேகர் மாணவ,மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் ஆரணி நகரசெயலாளர் முத்து,வார்டு கவுன்சிலர் கண்ணதாசன், பொருளாளர் வழக்கறிஞர் கரிகாலன்,வார்டு கவுன்சிலர்கள் ரகுமான்கான், சுபாஷினி,மல்லியன் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி,ஒப்பந்ததாரர் வெங்கடேசன்,மற்றும் ஆசிரிய ஆசிரியைகள்  மாணவ, மாணவியர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News