ஆரணி பேரூராட்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொன்னேரி வட்டக்கிளை சார்பில் ஆரணி பேரூராட்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2023-05-02 04:15 GMT

ஆரணி பேரூராட்சியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொன்னேரி வட்ட கிளை சார்பில் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பொன்னேரி வட்டக்கிளை செயலாளர் சித்ரா தலைமை தாங்கினார். மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தார் . இதில் சிறப்பு அழைப்பாளராக பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், தலைக் கவசம் நம் உயிர்க்கவசம் என்று நம் கருதி இருசக்கர வாகனத்தில் வெளியே செல்லும்போது கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும், இது நமக்காக மட்டுமல்ல நம்மை நம்பி இருக்கும் நம் குடும்பத்தை ஒரு நிமிடம் நினைத்து பார்க்க வேண்டும். சாலை விதிகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் இரு சக்கர வாகனத்தை இயக்கும் போது செல்போனில் பேசுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். இன்று அவர் பேசினார்

பின்னர்.20 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசத்தை அணிவித்து சாலை விதிமுறைகள், தலைக்கவசம் அணிவது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் சாலையில் தலைக் கவசத்துடன் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கௌரவப்படுத்தும் விதமாக மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார்.

சாலையில் சென்ற வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கரை ஒட்டியும் சாலை பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் பாஸ்கர். மற்றும் தியாகராஜன், பொன்னேரி வட்ட கிளை தலைவர் கோபால். ஹெல்த் கமிட்டி சேர்மன் சஞ்சீவி உட்பட பொன்னேரி வட்ட கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.வட்டக் கிளையின் துணைத் தலைவர் சுரிந்தர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News