வெள்ளியூர் கிராமத்தில் ஓய்வுபெற்ற மெட்ரோ வாட்டர் மேலாளர் தற்கொலை!

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தில் ஓய்வுபெற்ற மெட்ரோ வாட்டர் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-20 13:54 GMT

வெங்கல் காவல்நிலையம்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற மெட்ரோ வாட்டர் மேலாளர் பாலசிங்கம் (75). இவர் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் பணி ஓய்வு பெற்று தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த இவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கேசவன் கொடுத்த புகாரின் பேரில், வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News