அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
பழவேற்காடு அரசு பள்ளி மாணவர் களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் வழங்கினார்
பழவேற்காடு ஜெகதம்பாள் சுப்பிரமணியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி எம்எல்ஏ துரை சந்திரசேகர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஜகதம்பாள் சுப்பிரமணியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது, இவ்விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, மீஞ்சூர் வட்டாரத் தலைவர் புருஷோத்தமன். அத்திப்பட்டு நந்தா.பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயம் உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர்.
உதவி தலைமை ஆசிரியர் அகத்தியன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவி, பழவை அலவி, கன்னிமுத்து, ஜெயராமன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு அப்பள்ளியில் கல்வி பயிலும் 163 மாணவ,மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பெண்கள் எடுத்து அசத்தி காட்டி வருகிறதாகவும், தமிழக அரசு மாணவர் நலனை கருத்தில் எண்ணற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாகவும் அதில் காலை உணவு திட்டம், படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பேருந்து வசதிகள் இல்லாத சினிமா பாட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு எளிதாக பள்ளிக்கு வந்து செல்ல இலவச மிதிவண்டிகளை வாங்கி வருவதாக அவர் பேசினார்.