பொன்னேரி: ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் தூக்குப்போடு தற்கொலை!

பொன்னேரி ஆட்டந்தாங்கல் கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் தூக்குப்போடுட தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2021-05-25 08:35 GMT

சோழவரம் காவல்நிலையம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆட்டந்தாங்கல் கிராமத்தில் தினகரன் என்பவரின் தந்தை முனுசாமி (72) என்பவர் எம்.டி.சியில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2 வருடமாக மனநிலை சரியில்லாமல் இருந்துவந்தார். சம்பவத்தன்று மாலை மேல்வீட்டில் சீலிங்கில் தனக்குத்தானே தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News