இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி: ஆரணி அரசு மருத்துவமனையில் பொன்னேரி எம்எல்ஏ திடீர் ஆய்வு
ஆரணி அரசு மருத்துவமனையில் பாம்புக்கடி மற்றும் விஷபூச்சி கடிக்கு மருந்து இருப்பு உள்ளதா என பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி எஸ்பி கோவில் தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பாபு இவருக்கு திருமணம் ஆகி மனைவி விஜயலட்சுமி இவர்களுக்கு ரமேஷ்(14) தேவராஜ்(13) என்கின்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு சிறுவர்கள் ரமேஷ் என்பவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பும் தேவராஜ் 8ம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் குடும்பத்துடன் இரண்டு சிறுவர்கள் கடந்த 4.தேதி அன்று இரவு அவர்களது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது. வீட்டுக்குள் நுழைந்த கட்டு விரியன் பாம்பு ஒன்று சிறுவர்கள் இரண்டு பேரையும் கடித்தது இதில் சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் எழுந்து பார்த்தபோது அருகாமலே விஷம் நிறைந்த கட்டு விரியன் பாம்பு ஒன்று நலிந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாம்பை அடித்து கொன்று சிறுவர்களை இருவரையும் மீட்டு பெரியபாளையம் அடுத்த வெங்கல் தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் என்ற சிறுவன் இறந்த நிலையில் மற்றொரு சிறுவனை மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தேவராஜ் என்கிற மற்றொரு சிறுவனும் பரிதாபமாக பலியானார்.
இந்த செய்தி நமது இன்ஸ்டாநியூஸ் தளத்தில் விரிவாக பதிவிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து ஆரணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடிக்கு மருந்து இல்லையென வந்த புகார் அடிப்படையில் காலையில் ஆரணி அரசு மருத்துவமனைக்கு பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திடீர் ஆய்வு மேற்கொண்டு பாம்பு கடிக்கு விஷப்பூச்சி கடிகளுக்கு மருந்து இருப்பு உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
அப்போது மருத்துவர்கள் பாம்பு கடிக்கு விஷப்பூச்சி கடிக்கும் மருந்து இருப்பு உள்ளது. பிற நோய்களுக்கும் மருந்து இருப்பு உள்ளதா என்றும் மேலும் இங்கு அளிக்கும் சிகிச்சைகளை குறித்து சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் மருத்துவர் திலக் எடுத்துக் கூறினார்.
இந்த ஆய்வின் போது அப்பகுதி மக்கள் எம்எல்ஏவிடம் தெரிவிக்கையில், மருத்துவமனையில் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்பதால், இரவு நேரங்களில் மருத்துவர்களை பணியில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் மேல் சிகிச்சைக்காக சென்னை, திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் நீண்ட நேரம் ஆகிவிடுகிறது என்றும் இதனால் சில நேரங்களில் மிகவும் இன்னலுக்கு ஆளாகுவதாகவும் கூறினர். எனவே, ஆரணி மருத்துவமனையில் அவசர உதவிக்கு108 அவசர உறுதி பெற்று தர வேண்டும் மருத்துவமனை சுற்றி வளர்ந்துள்ள அடர்ந்த முட்பொதர்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதன் மீது சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர் நடவடிக்கை நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் விஷ பூச்சி கடிகளுக்கு மருத்துவமனையில் மருந்து இருக்கிறதை படிக்காத பாமர மக்கள் அறிந்து கொள்ள ஒலிபெருக்கி வாயிலாக அனைத்து வார்டுகளில் விளம்பரப்படுத்திட வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது ஆரணி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமாரன், வார்டு கவுன்சிலர்கள் கண்ணதாசன், ரஹ்மான் கான், சுபாஷினி ரவி, அருணா நாகராஜ், கௌசல்யா தினேஷ், சதீஷ், குமார், திமுக நிர்வாகிகள் ஆரணி பேரூர் செயலாளர் முத்து, வழக்கறிஞர் கரிகாலன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.