ஆரணியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு : 600 பேருக்கு மஞ்சப்பை வழங்கல்
Plastic Awareness In Tamil- திருவ்ள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து. இதில் 600 பேருக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.
Plastic Awareness In Tamil- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிக்கும் வகையில் ஆரணி பேரூராட்சி பஜார் கடைவீதியில் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஆரணி பேரூராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரிபொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி , விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார், வார்டு கவுன்சிலர் கண்ணதாசன் ஆகிய முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கலந்து கொண்டு ஆரணி பஜார் பகுதியில் உள்ள கடைகளிலும் மற்றும் பொருட்கள் வாங்க வந்த பொது மக்களிடையே பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பைகளை வழங்கினார் இதில் வார்டு கவுன்சர்கள் குமார், சுபாஷினி, கௌசல்யா, பிரபாவதி உட்பட பலர் உடன் இருந்தனர் முடிவில் இளநிலை உதவியாளர்கள் யுவராஜ், முருகன் ஆகிய நன்றி தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2