ஆரணியில் உள்ள கால்நடை மருத்துவமனை சீரமைக்க மக்கள் கோரிக்கை
பழுதடைந்த நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் உள்ள கால்நடை மருத்துவமனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம். ஆரணி பேரூராட்சியில் உள்ள.15 வார்டுகளில் சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எஸ்.பி கோவில் தெரு பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகே கடந்த 2012 ஆம் ஆண்டு ரூபாய் 26.65 லட்சம் மதிப்பீட்டில்.கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
இந்த கால்நடை மருத்துவமனைக்கு பேரூராட்சியில் உள்ள மக்கள் ஆடு, மாடு, கோழி, நாய் என அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை உடல்நிலை சரியில்லாத போது, இங்கு மருத்துவம் பார்த்து செல்வார்கள். இது மட்டுமல்லாமல் இந்த மருத்துவமனை அமைந்துள்ள சுற்று வட்டார கிராமங்களான மங்கலம், காரணி, புதுப்பாளையம், மல்லியன் குப்பம், கல்லூர் பாலவாக்கம், உள்ளிட்ட10.க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்களும் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை ஆரணி அழைத்து வந்து மருத்துவம் பார்த்து செல்வார்கள்.
இந்த நிலையில் இந்த மருத்துவமனைக்கு முன்பு உள்ள மாடுகளை பரிசோதிக்கும் கொட்டகை மேற்கூரை உடைப்பு ஏற்பட்டு முற்றிலமாக சேதமடைந்துள்ளது. மேலும் மருத்துவமனை சுற்றிலும் அடர்ந்த முள் புதர்களும் வளர்ந்து விஷ பூச்சிகளுக்கு இருப்பிடமாக மாறி உள்ளது. இது மட்டுமல்லாமல் சுற்றுச்சுவர், கதவு இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த மருத்துவமனை வளாகத்தில் வளர்ந்துள்ள முள் புதர்களையும், பழுதடைந்த கட்டிடத்தை சரி செய்து சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.