பால் முனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு..!
பொன்னேரி அருகே பால் முனீஸ்வரர் ஆலயத்தில் பால்குட ஊர்வலம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொன்னேரி அருகே சித்திரை முதல் திங்கள் கிழமையை ஒட்டி ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு பால் முனீஸ்வரர் கோயிலுக்கு பால்குடம் ஏந்தி பால் அபிஷேகம் செய்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மாளிவாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த பால் முனீஸ்வரர் ஆலயம் உள்ளது சித்திரை முதல் திங்கள் ஒட்டி கிராம மக்கள் நல்ல மழை பெய்ய வேண்டும் விவசாயம் செழிக்க வேண்டும் திருமணம் தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் பெறவும், மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டியும் பால்குடம் ஏந்தி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் சாமிக்கு பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மஞ்சள் இளநீர்,தேன், பன்னீர், ஜவ்வாது, சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு நைவேத்தியமாக பழங்கள், சர்க்கரை பொங்கல், பாயசம் படையல் இட்டு பால் முனீஸ்வரர் ஆலயத்தில் கிராம மக்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.