வலுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கிட எம்.பி உறுதி
வலுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.;
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்ட கண்காணிப்பாளர் வலுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கி உதவிட கோரிக்கை விடுத்தார்.
கோரிக்கையை ஏற்ற திருவள்ளூர் எம்பி வீரர்களுக்கான பயிற்சி உபகரணங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஜி. சிதம்பரம் உடன் இருந்தார்.