பழைய குடிநீர் மேல்நிலை தொட்டி இடிப்புப் பணிகளை எம்எல்ஏ ஆய்வு..!

பெரியபாளையம் அருகே ஆரணியில் பழைய குடிநீர் மேல்நிலை தொட்டி இடிக்கும் பணிகளை எம்எல்ஏ துரை சந்திரசேகர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கூறினார்.

Update: 2024-05-23 05:30 GMT

பழைய குடிநீர் மேல்நிலை குடிநீர்த்தொட்டி இடிக்கும் பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ துரை சந்திரசேகர்.

பொன்னேரி அருகே 41.ஆண்டுகள் பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றும் பணிகளின் போது குடிநீர் குழாய் சேதமடைந்து 3நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.  சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு குடிநீர் விநியோகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த எம்எல்ஏ கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி பேரூராட்சியில் சுமார் 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஆரணி பேரூராட்சி இருக்கன் தெருவில் கடந்த 41.ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்தது.

இதனையடுத்து சுமார் 3லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பயன்பாட்டில் இல்லாத பழைய நீர்த்தேக்க தொட்டி கடந்த 15ஆம் தேதி இடித்து அகற்றப்பட்டது. அப்போது மாற்று ஏற்பாடாக செய்யப்பட்ட குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்ததால் குறிப்பிட்ட சில தெருக்களில் கடந்த 3நாட்களாக குடிநீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

இந்த தகவலை அறிந்த பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் நேரில் பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். உடனடியாக குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைந்து கட்டி முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்போது பேரூராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News