மீஞ்சூர் பள்ளியில் காலை உணவு திட்டத்தை எம்எல்ஏ தொடக்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள பள்ளியில் காலை உணவுத் திட்ட எம் எல் ஏ துரை சந்திரசேகர் தொடக்கி வைத்தார்

Update: 2023-08-26 05:00 GMT

மீஞ்சூரில். தமிழக முதல்வரின் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

மீஞ்சூரில். தமிழக முதல்வரின் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

தமிழக அரசின் 1 முதல்5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்தினை துவங்கி தமிழக முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு தொடக்க விழாக்கள் நடைபெற்றன. 

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய மீஞ்சூர் தேரடி தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் விழா நடைபெற்றது. விழாவிற்கு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமை வகித்தார்.

மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார்,(கிராம ஊராட்சி)சந்திரசேகர், மீஞ்சூர் திமுக பேரூர் கழக செயலாளர் தமிழ்உதயன், பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா,வட்டாட்சியர் செல்வகுமார், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ்ராஜ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு காலை உணவு அளிக்கும் திட்டத்தினை துவக்கி பள்ளி குழந்தைகளுக்கு உணவுகளை பரிமாறியும், அவர்களுடன் உணவு அருந்தி தரத்தினை உறுதி செய்தனர்.மேலும் தமிழக முதல்வரின் இத்திட்டத்தினை குறித்து சிறப்புரையாற்றினர்.

இதேபோன்று மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம், நாலூர், வல்லூர், உள்ளிட்ட55 ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி, வல்லூர் தமிழரசன், அத்திப்பட்டு புருஷோத்தமன், அபூபக்கர்,நக்கீரன், துரைவேல் பாண்டியன் உள்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News