துப்புரவு பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கிய நகராட்சித் தலைவர்
பொன்னேரி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சித் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் காலை சிற்றுண்டி வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் காலையில் அந்தந்த பகுதிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் சென்று துப்புரவு பணிகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் பசியைப் போக்க காலையில் பணியாற்றும் பணியாளர்கள் பசியோடு பணியாற்ற கூடாது என்பதை உணர்ந்து காலையில் பொன்னேரி நகராட்சியில் இருந்து செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு தினந்தோறும் காலை சிற்றுண்டி வழங்கி வருகிறார். பொன்னேரி நகராட்சித் தலைவர் பரிமளம் விஸ்வநாதனின் இந்த செயல் அந்தப் பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.