மத்திய அரசை கண்டித்து எல்ஐசி ஊழியர்கள், முகவர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் மத்திய அரசை கண்டித்து எல்ஐசி ஊழியர்கள், முகவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-09-02 17:09 GMT
பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் எல்ஐசி அலுவலகத்தின் முன்பாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசு தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து வருவதாகவும், தற்போது எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

பொதுமக்களின் சேமிப்பு வங்கியாகவும் எல்ஐசி நிறுவனம் மக்களின் நம்பிக்கையை பெற்று 65வது ஆண்டு தொடங்கப்பட்டு உள்ளது.

34லட்ச கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வரும் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முயலும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News