பொன்னேரியில் செங்குன்றம் குறுவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஜமாபந்தி
மாற்றுத்திறனாளிக்கான உதவிதொகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெற்றுதர வேண்டி பொன்னேரி வட்டாச்சியர் ரஜினிகாந்த்யிடம் மனுக்களை வழங்கினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலர் காயத்ரி தலைமையில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி (பசலி) நடைபெற்றது. இதில் 1431-ல் உள்ள செங்குன்றம் குறுவட்டத்திற்கு உட்பட்ட நாரவாரிகுப்பம், தண்டல்கழனி, புள்ளிலையன், தீர்த்தக்கிரியம்பட்டு, பாலவாயல், அத்திவாக்கம், அழிஞ்சிவாக்கம், வடகரை, கிராண்ட்லையன், விளாங்காடுபாக்கம், சென்றம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.
முதல்நாளன்று முதியோர் உதவி தொகை, இலவசவீட்டுமனைபட்டா, பாட்டாமாற்றுதல், சாதிசான்று, விதவை உதவிதொகை, திருமணநிதி, வருமானவரி சான்று, மாற்றுத்திறனாளிக்கான உதவிதொகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெற்றுதர வேண்டி பொன்னேரி வட்டாச்சியர் ரஜினிகாந்த்யிடம் மனுக்களை வழங்கினர். பின்னர் வட்டாச்சியர் பொதுமக்கள் வழங்கிய மனுகளை வாங்கி கொண்டு உரிய நடவடிக்கை எடுப்போம் என்று பயனாளிகளிடம் கூறினார். இதில் துணை வட்டாச்சியர் கண்ணன், செங்குன்றம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் தனபால், கிராம நிர்வாக அலுவலர்கள் சேகர், ரவிந்திரன், அன்னலட்சுமி, விஜயரமணி உள்ளிட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.