5 ஆண்டுகளாக உயிருக்கு ஆபத்து.. பாதுகாப்பு கேட்டு தம்பதியினர் மனு

கலப்பு திருமணம் செய்ததால் 5 ஆண்டுகளாக உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு கேட்டு கோட்டாட்சியரிடம் தம்பதியினர் மனு அளித்துள்ளனர்.

Update: 2023-03-17 03:00 GMT

கோட்டாட்சியரிடம் மனு அளித்த தம்பதியினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் அடுத்த வாயலுார்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தகுமார், அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த மாலதி என்பவரை காதலித்து கடந்த 2018 ஆண்டில் கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் காதல் தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் பாதுகாப்பு கோரி பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். காதல் திருமணத்தால் தங்களுக்கும் தங்களது உறவினர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு கேட்டும் மனு அளித்துள்ளனர்.

கலப்பு திருமணம் செய்ததால் மனைவி மாலதி குடும்பத்தார் தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. திருமணம் ஆன நாளில் இருந்து, தற்போது வரை தங்களுக்கு மிரட்டல் விட்டு வருகின்றனர். கொலை செய்யும் நோக்கத்தோடு உள்ளதாகவும், ஏற்கனவே தங்களது காதல் திருமணத்தை நடத்தி வைத்த உறவினர் கோபி என்பவருக்கும் தொல்லைகள் கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், போலீசார், மனைவியின் உறவினர்களுக்கு சாதகமாக செயல்படுவதால், தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லையென்று இதனால் தங்கள் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News