ஜேக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது

Update: 2023-03-25 03:15 GMT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரியில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் மாநிலம் தழுவிட மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

பொன்னேரி அரசு கல்லூரி அருகே நடைபெற்ற  மனிதச்சங்கிலி போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கைகோத்து நின்று தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும், அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பணிவரன்முறை செய்திட வேண்டும், அரசு துறைகளில் தனியார் முகமை மூலம் பணியிடம் நிரப்புவதை கைவிட வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை அடுத்த கட்ட போராட்டங்களுக்கு தள்ளிவிடாமல், தமிழ்நாடு அரசு தங்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிட வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜேக்டோ- ஜியோ அமைப்பினரிடம், திமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் போராட்டம் நடத்தியவர்கள் மீதான அதிமுக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது


Tags:    

Similar News