பொன்னேரி அருகே சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம்
சோம்பட்டு கிராமத்தில் சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாமில். பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் மஞ்சஞ்கரணை வெல்ஸ் மருத்துவக் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்புணர்வு இலவச பொது மருத்துவம் மற்றும் பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் நல்வாழ்வுத்துறை முதலமைச்சரின் நிறுவன மருத்துவ காப்பீடு திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவ சிகிச்சைகள்: ரத்தப் பரிசோதனை,உயர் ரத்த அழுத்த பரிசோதனை, உயர்கருவி மூலம் பல் பரிசோதனைகள் மற்றும் இலவச மருத்துவ ஆலோசனைகள் சிகிச்சை பெற வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பொது மருத்துவமும் நடைபெற்றது. இந்த முகாமில் உயர்ரக மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இம்முகாமில் கலந்து கொண்டு வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு அனைத்துவித பரிசோதனைகளும் சிகிச்சைகளும் இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சோம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம் முகாமை தொடக்கி வைத்தார். வெல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் குமுதா லிங்குராஜ்,உதவி மருத்துவ கண்காணிப்பாளர் சதீஷ் தேவ் ஆகியோர் ஆலோசனையின் படி, முகாம் திட்ட மேலாளர் ஜானகிராமன் மற்றும் மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டனர்.