திருவள்ளூர், பொன்னேரி விபத்து செய்திகள்

திருவள்ளூர் அருகே அரசு பேருந்து நடத்துநர், பொன்னேரி அருகே சாலையை கடக்க முயன்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தனர்

Update: 2023-01-04 05:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றத்தைச் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஆதிமூலம்(57) இவர் சென்னை அம்பத்தூர் மாநகர போக்குவரத்து பணிமனையில் 71E திருநின்றவூர் முதல் பிராட்வே பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார்

வெங்கல் அடுத்த தாமரைப்பாக்கத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி ஆதிமூலம் மற்றும் இவரது தம்பி கார்த்திகேயனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வாணியன்சத்திரம் மின்வாரிய அலுவலகம் எதிரே சென்றபோது சாலையில் கொட்டியிருந்த கற்கள் மீது மோட்டார் சைக்கிள் சென்றபோது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற டிப்பர் லாரி ஆதிமூலம் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தம்பி கார்த்திகேயன் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கல் காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த நடத்துனர் ஆதிமூலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பக வெங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்

பொன்னேரி அருகே தனியார் பேருந்து மோதி, பெண் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வெள்ளிவாயல் சாவடி, துர்க்கன் காலனி பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவ், இவரது மனைவி கிருஷ்ணம்மாள்,(65). இவர், மணலி புது நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.

இன்று அதிகாலை , வேலைக்கு செல்வதற்கா வீட்டில் இருந்து கிளம்பி பொன்னேரி நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்தார்.

அப்போது, தனியார் கம்பெனிக்கு ஆட்களை ஏற்றி செல்லும் தனியார் பேருந்து ஒன்று, கிருஷ்ணம்மாள் மீது மோதியது. தூக்கிவீசப்பட்ட கிருஷ்ணம்மாள் உயிருக்கு போராடினார். அவரை காப்பாற்றி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.

இது தொடர்பாக மாத்தூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, தனியார் பேருந்து ஓட்டுனர் ஜெகநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News