தமிழக அரசை கண்டித்து சுதந்திரதினத்தில் சென்னையில் சத்தியாகிரக போராட்டம்

சுதந்திர தின நாளில் சென்னையில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்

Update: 2023-08-14 03:00 GMT

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில்  செய்தியார்களிடம் பேசிய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன்

சுதந்திர தின நாளில் தமிழ்நாடு அரசை கண்டித்து சென்னையில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும். விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்  தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் 100கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட நிலையில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:  தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023என நிலத்தை அபகரிக்கிற சட்டத்தை கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதிநாளில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ளது. தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவாக நீர்நிலைகளையும் கையகப்படுத்தும் மோசடி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கூடாது என கேட்டு கொள்கிறோம். இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாகவே தச்சூர் - சித்தூர் சாலை என்ற பெயரில் நிலம் கையகப் படுத்தப்படுகிறது. மேலும் ஊத்துக்கோட்டை பகுதியில் சுமார் 10000ஏக்கர் பரப்பில் சாட்டிலைட் சிட்டி, டிட்கோ, சிப்காட் என நிலத்தை அபகரிக்க துடிக்கிறார்கள். தச்சூர் - சித்தூர் சாலை அமைப்பதை கைவிட வேண்டும்.

காட்டுப்பள்ளி துறைமுகத்தை ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்து விடுவேன் என அப்போது கூறிய தற்போதைய முதலமைச்சர் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு ஆதரவாக துணை போகிறார். விளைநிலங்களை அபகரித்து தொழில் புரட்சி என்ற பெயரில் கருப்பு பணத்தை வைத்துள்ள முதலாளிகள் முதலீடு செய்யும் வகையில் நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நெல்லுக்கு 2500ரூபாயும், கரும்புக்கு 4000ரூபாயும் வழங்குவதாக திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில், தற்போது வரை வழங்காமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார். காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீரை பெற்ற தரவில்லை எனவும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு அரசு பிற்போக்குத்தனமான இருப்பதாக சாடினார்.

முல்லை பெரியாறு வறண்டு கிடக்கிறது, தமிழ்நாட்டில் நீர் ஆதாரத்தால் விவசாய உற்பத்தி அடியோடு அழிந்து வருவதாகவும், விவசாய நிலங்களை அபகரிக்க தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையால் முற்றிலும் விவசாய குடும்பங்களும் அழிந்து விடும் நிலை இருக்கிறது. பெற்ற சுதந்திரத்தை பேணி காத்திட வேண்டும் என்பதால் வரும் 15ஆம் தேதி விவசாயிகள் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்க உள்ளோம்.

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கைவிட வலியுறுத்தியும், குவிண்டால் நெல்லுக்கு 3000ருபாய் வழங்கிட வேண்டும், கரும்புக்கு 4500ரூபாய் வழங்க வேண்டும், வேளாண் உற்பத்தி பொருளுக்கு உரிய விலை வழங்கிட வேண்டும், தேங்காய் எண்ணெய் நிலைய விலை கடைகளில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தில் சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

நெய்வேலி திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், சேலம் 8வழி சாலை, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எதிராக திமுக தலைவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்.

ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திமுக அரசு இந்த பேரழிவு திட்டங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு போராடும் விவசாயிகள் மீது காவல் துறையை ஏவி பொய் வழக்கு போடுவதும், கார்ப்பரேட் நிறுவங்களுக்கு அச்சுறுத்தல்களுக்கு காவல்துறை துணை போவதால் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் திமுக ஆட்சிக்கு எதிராக மாறிவிட்டது.

கடந்த ஆட்சியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது மாநில ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். விவசாய நிலத்தை அபகரிக்கும் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டங்களை மேற்கொள் வோம் எனவும், விவசாயிகளுக்கு எதிரான ஆட்சியை அகற்ற தீவிர போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.


Tags:    

Similar News