திருத்தணியில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு
திருத்தணியில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.;
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி- திருமலையில் சீனிவாச பெருமாளை தரிசிக்க சென்னையிலிருந்து சாலை மார்கத்தில் திருப்பதிக்கு சென்றார்.
அவருக்கு திருத்தணி புதிய பைபாஸ் சாலையில் திருத்தணி நகர செயலாளர் டி.செளந்தர்ராஜன், திருத்தணி ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை எ.ரவி. பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவசன், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான ஏ.ஜி.இரவிச்சந்திரன், பள்ளிப்பட்டு பேரூர் செயலாளர் ஜெயவேலு, மாவட்ட பொருளாளர் ஜெ.பாண்டுரங்கன் ஆகியோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள ,பெண்கள்,பொதுமக்கள் எடப்பாடி க்கு மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.