தீக்கிரையான வலைகளை மீன்வளத்துறை இணை இயக்குனர் நேரில் ஆய்வு
பழவேற்காடு அருகே இரு தினங்களுக்கு முன்பு திடீர் தீ விபத்தால் எரிந்து சேதமான மீனவர்களின் மீன்பிடி வலைகளை மீன்வளத்துறைஇணை இயக்குனர் நேரில் வந்து ஆய்வு செய்தார்.;
பழவேற்காட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன் தீக்கிரையான மீன்பிடி வலைகளை மீன்வளத்துறை இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். வலைகள் சேதம் அடைந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ பெண்கள் வேதனை.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பழவேற்காடு அடுத்த அரங்கங்குப்பம் மீனவ கிராமத்தில் கடந்த 2.நாட்களுக்கு முன் நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடி வலைகள் தீயில் கருகி நாசமானது.
சுமார் 10லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் கருகி நாசமான நிலையில் மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா மீனவ கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
அப்போது அங்கு வந்த மீனவ பெண்கள் தங்களது வாழ்வாதாரமாக விளங்கும் மீன்பிடி வலைகள் தீயில் கருகியதால் செய்வதறியாது தவிப்பதாக கதறினர். வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் உடனடியாக தங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது மீன்வளத்துறை இணை இயக்குனரிடம் மீனவப் பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மீனவ பெண்களுக்கு அப்போது ஆறுதல் தெரிவித்த மீன்வளத் துறை இணை இயக்குனர் இது தொடர்பாக விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.