100 நாள் வேலைப்பணிக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை செய்யும் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்

Update: 2023-05-26 03:30 GMT

பொன்னேரி அருகே முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என கூறி 100நாள் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

பொன்னேரி அருகே முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என கூறி 100நாள் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, பூங்குளம் ஊராட்சியில். சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் கிராமத்தை சேர்ந்த பெண்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என கூறி 100நாள் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆத்திரமடைந்த 100 நாள் வேலை செய்யும் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். பணியாற்றும் ஊதியம் தங்களுக்கு முறையாக வங்கி கணக்கில் வரவு வைப்பதில்லை எனவும் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு 100நாள் பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணியாற்றும் ஊதியத்தை உடனுக்குடன் தங்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 100நாள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Tags:    

Similar News