கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2024-07-02 10:20 GMT

சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பொன்னேரி அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமை கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

பானிபூரி விரும்பி சாப்பிடுவீங்களா? உங்களுக்கு கேன்சர் வரலாமாம்!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி. சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமை நாட்களில் கோவிலுக்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினால் திருமணத்தடை நீங்கும், ரியல் எஸ்டேட் செழிக்கும், வீடு கட்ட முடியும், அரசியலில் செல்வாக்கு பெறலாம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்பதில் பக்தர்களின் அசையாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி கோவிலின் பின்புறத்தில் உள்ள வேப்ப மரத்தில் ஊஞ்சல் கட்டியும் வழிபாடு நடத்துவார்கள்.

இன்று செவ்வாய்க்கிழமை, கிருத்திகை என்பதால் அதிகாலை மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

முருகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள் மற்றும் கிருத்திகை என்பதால் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வந்தது.சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரிக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சாலையில் கிலோமீட்டர் கணக்கில் நின்று கியூ வரிசையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாகவே காத்திருந்து தரிசனம் செய்தனர் .

நெரிசலில் 27 பேர் மரணம்..! ஹத்ராஸில் நடந்த மதக்கூட்டத்தில் துயரம்..!

இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கையில் இத்தகை பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வேண்டிய வரங்கள் நிறைவேறும் என்பதில் பக்தர்கள் நம்பிக்கையாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய காத்திருப்பதாகவும், பிரசித்தி பெற்ற இத்திருத்தளத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கான தனி அறை உள்ளிட்ட வசதிகள் இல்லை என்றும்,

வயதான முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் , தாய்மார்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் மணி கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதாகவும்,மேலும் பக்தர்கள் கொண்டு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் வசதியும் இல்லை என்றும், நடைபாதை வியாபாரிகள் சாலையை இரு புறமும் ஆக்கிரமித்து கடைகள் நடத்துவதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுவதாகவும், இதனை தடுக்க வேண்டிய போலீசார் வேடிக்கை பார்ப்பதாகவும்,விஐபி தரிசனம் என்ற பெயரில் விருந்தினர்களை அழைத்துச் சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்யும் வரை சாமானிய மக்கள் வெயிலில், மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை இருப்பதாகவும்,இதனால் சில நேரங்களில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கோபுர தரிசனம் மட்டும் செய்துவிட்டு வீடு திரும்புவதாகவும் வேதனையுடன் பக்தர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News