தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் பொன்னேரியில் கண்டன ஆர்பாட்டம். நீதிமன்ற உத்தரவின்படி சம்பளத்தை உயர்த்திட கோரிக்கை!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் நீண்ட காலமாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை தமிழக அரசு உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக இந்த ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும், தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள் சார் ஆட்சியர் சங்கீத் பல்வந்த் வாகேவை சந்தித்து தூய்மை பணியாளர்கள் கோரிக்கை குறித்த மனுவை அளித்தனர்.இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சார் ஆட்சியர் உறுதியளித்தார்.