சோழவரம் அரசு பள்ளி ஆண்டு விழா..! மாணவர்களின் அசத்தல் கலை நிகழ்ச்சிகள்..!
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே அரசு துவக்க பள்ளி ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றது.;
போட்டிகளில் வெற்றிபெற்ற மான,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சோழவரம் அரசு பள்ளியில் கல்வி சீர்வரிசை மற்றும் ஆண்டுவிழா. மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அரசு துவக்கப்பள்ளியில் கல்வி சீர்வரிசை மற்றும் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.விழாவின் சிறப்பம்சமாக பெருமாள் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து சேர்த்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பள்ளி ஆண்டுவிழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அபிஷா ஜெகன் முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியை உமா அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார், வட்டார கல்வி அலுவலர் சேகர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.விழாவில் மாணவ மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம், ஒயிலாட்டம் கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இதையடுத்து கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
இந்நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளர் ரவி, சமூக ஆர்வலர் ரமேஷ், ஊராட்சி செயலர் ஜலாலுதீன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சங்கீதா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.