வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு..!
பொன்னேரியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது.
பொன்னேரியில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு. இருச்சக்கர வாகனத்தில் வந்து லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அங்கமுத்து தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3.ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி வழக்கம்போல் எப்போது தமது வீட்டின் வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு லாக் செய்து வீட்டிற்குள் சென்றார். மறுநாள் காலையில் வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணாமல் போயிருந்தது.இது குறித்து ராஜசேகரன் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்பபோது இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3ஆம் தேதி அதிகாலை ராஜசேகரன் வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறிது தூரம் சென்று நிறுத்தியபின்னர், ஒருவர் மட்டும் வந்து லாவகமாக வாகனத்தை திருடிச் செல்கிறார். இந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.
மேலும் இது குறித்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தெரிவிக்கையில் இதுபோன்று திருடுகள் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.எனவே இதுபோன்று சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற திருட்டு சம்பவங்களை தடுக்க முடியும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருசக்கரவாகனத்தை திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.