குளத்தில் காணாமல் போன இளைஞர் சடலம் கண்டெடுப்பு: போலீசார் விசாரணை
சோழவரம் அருகே குளத்தில் காணாமல் போன இளைஞர் சடலத்தை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த தேவியாகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார்(25). திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த விஜய நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி சேலத்தில் உள்ள தமது தங்கையிடம் செல்போனில் பேசி விட்டு சுவிட்ச் ஆப் ஆனதாகவும், அதன் பின்னர் பிரவீன் குமாரை தொடர்பு கொள்ளமுடியவில்லை என அவரது தந்தை சக்திவேல்(47), சோழவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
சோழவரம் போலீசார் அதனடிப்படையில் பிரவீன் குமார் வேலை பார்த்து வந்த விஜய நல்லூர் பகுதியில் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அங்குள்ள செல்லியம்மன் கோவில் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்று போலீசார் இறந்து கிடப்பது பிரவீன் குமார் என்பது உறுதிப்படுத்தி சடலத்தை மீட்டு பார்த்த போது தலையில் நெற்றி பகுதியில் 2 வெட்டுக்கள் இருப்பது தெரியவந்ததால் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து பிரவீன் குமாரை கொலை செய்து குளத்தில் வீசியதாகவும், அது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் நல்லூர் பகுதியில் உள்ள சிற்றுண்டி கடையில் கடந்த திங்களன்று இரவு தமது நண்பருடன் பிரவீன்குமார் உணவருந்த சென்றபோது கடையில் பணம் தராமல் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் தமது மகனிடம் கூறியதையடுத்து சிற்றுண்டி கடை உரிமையாளரின் மகன் நரேஷ் பிரவீன்குமாரை உருட்டுகட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் பிரவீன்குமார் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிற்றுண்டி கடை உரிமையாளரின் மகன் நரேஷை சோழவரம் போலீசார் கைது செய்தனர். சிற்றுண்டி கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.