சேதமடைந்த சாலையில் வாகன ஓட்டியவர்களுக்கு இனிப்பு வழங்கிய பாஜகவினர்
மீஞ்சூரில் பல ஆண்டுகளாக சேதமடைந்த சாலையில் வாகனம் இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர்.;
மீஞ்சூரில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்தனர். குண்டும், குழியுமான பேட்ச் ஒர்க் சாலையில் உயிரை பணயம் வைத்து ஓட்டுவதற்கு வாழ்த்து தெரிவித்து சாக்லேட் வழங்கிய பாஜவினர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சேதமடைந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு சாக்லேட் வழங்கி பாஜகவினர் நூதன முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பொன்னேரி - திருவொற்றியூர் சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது.
இதில் தற்காலிகமாக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு பேட்ச் ஒர்க் செய்யப்பட்டது. இதனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரிடம் நேற்று பொதுமக்கள் முறையிட்டதில் மழைக்கு பிறகு தற்காலிகமாக தார் சாலை அமைக்கப்படும் எனவும், அதற்கு பிறகு 16கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிரந்தர தீர்வாக சாலை அமைத்து தரப்படும் என கூறி இருந்தார்.
இந்நிலையில் மீஞ்சூரில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாக்லேட் வழங்கி பாஜகவினர் நூதன எதிர்ப்பை பதிவு செய்தனர். முறையாக செப்பனிடாமல் பேட்ச் ஒர்க் மட்டுமே போடப்பட்ட சாலையில் உயிரை பணயம் வைத்து திறமையாக வாகனத்தை இயக்குவதற்கு பாராட்டு தெரிவித்து பாஜவினர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
பல்வேறு விபத்துக்கள் நடைபெறும் நிலையில் சாலையை பேட்ச் ஒர்க் மட்டுமே செய்து கொண்டு சாலையை அமைக்க முன்வராத தமிழ்நாடு அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இனிப்புகளை வழங்கியதாக பாஜகவினர் தெரிவித்தனர்.