விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-03-29 03:45 GMT

 தனித்துறையை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும், குறைந்தபட்ச கூலியாக ரூபாய் 600 நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே உருவாக்க வேண்டும். விவசாய கூலி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 600 வழங்க வேண்டும். 100நாள் வேலைக்கு தேர்தலில்  வாக்குறுதி அளித்தபடி 150நாட்களாக அதிகரித்து  வேலை வழங்கிட வேண்டும்.

உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், 60 வயதான விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி உதவி தொகை வழங்கிட வேண்டும், குடிமனை பட்டா கோரி மனு அளித்துள்ள மக்களுக்கு நிபந்தனையின்றி பட்டா வழங்கிட வேண்டும், பொது விநியோக திட்டத்தை பலப்படுத்தி தரமான பொருட்களை வழங்கிட வேண்டும்

எனவே, இந்த வீட்டு மனை பட்டா கோரி மனு அளித்துள்ள மக்களுக்கு நிபந்தனையின்றி பட்டா வழங்கிட வேண்டும், பொது விநியோக திட்டத்தை பலப்படுத்தி தரமான பொருட்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Tags:    

Similar News