மீஞ்சூர் ரயில் நிலையத்தில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்

ஆவடி காவல் ஆணையரக மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் காவல் ஆய்வாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது

Update: 2023-06-27 04:15 GMT

மீஞ்சூர் ரயில் நிலையத்தில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்

மீஞ்சூரில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் நடத்துதல்  போன்ற குற்றங்களை பற்றிய தகவல்களை அனுப்பும் முறை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் ஆவடி காவல் ஆணையராக எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல்,கடத்துதல் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களை பற்றிய தகவல்களை அனுப்பும் முறை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

போதை வஸ்துக்களை கடத்தல் விற்பனை செய்தல் போன்ற குற்றங்கள் பற்றிய தகவல்களை 93454 55400 என்ற எண்ணுக்கு தெரியப்படுத்தவும் வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பவும் இது குறித்த படங்கள்,லொகேஷன் அனுப்பி வைக்கவும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இத்தகவல்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும் என்பது குறித்தும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆவடி காவல் ஆணையரக மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் காவல் ஆய்வாளர் கே.எம்.முனியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தென்னிந்திய ரயில்வே துறையின் மீஞ்சூர் பகுதி ஆய்வாளர் ரகுபதி, மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் முதல்வர் சுஜாதா, நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முரளிதரன், காவல் உதவி ஆய்வாளர் சைமன் மற்றும் ஜெயின் கல்லூரி மாணவ மாணவிகள் திரளானோர் இதில் பங்கேற்றனர்.


Tags:    

Similar News