ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திய 5 பேர் கைது!

ஆந்திர மாநிலத்திலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 5 பேரை பெரியபாளையம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-28 13:49 GMT

மது கடத்தியதாக கைதானவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி வருபவர்களை கைது செய்ய ஊத்துக்கோட்டை செக்போஸ்ட் அருகே அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மதுபாட்டில்கள் கடத்தி வந்த சென்னை செங்குன்றத்தை சேர்ந்த குமார் (28), சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த குப்பன் (31), சென்னை அம்பத்தூரை சேர்ந்த பிரகாஷ் (25), செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூரை ராமு (35), வெங்கல் அருகே உள்ள ஆவாஜிபேட்டை கிராமத்தை சேர்ந்த தனசேகர் (45) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் கடத்தி வந்த 30 மது பாட்டில்களையும் இதற்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்து பெரியபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.  அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News