ஸ்ரீ அக்னி அம்மன் ஆலய தீமிதி திருவிழா..!
பொன்னேரி அருகே ஸ்ரீ அக்னி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபாடு செய்தனர்.
பொன்னேரி அருகே பிரளயம்பாக்கம் அருள்மிகு ஓம் ஸ்ரீ அக்னி அம்மன் ஆலய 30 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பிரளயம்பாக்கத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஒம்ஶ்ரீ அக்னி அம்மன் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தின் 30 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி அக்னி அம்மனுக்கு ஒருவார காலம் விரதம் இருந்து கிராம தேவதையான அருள்மிகு உலகாத்தாம்மன் ஆலயம் முன்பு அலங்காரம் முடித்து கரகம்,தீச்சட்டி ஏந்தி மேல காலங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் அக்னி அம்மன் ஆலய முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் மூன்று முறை இறங்கி தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.இந்த விழாவில் பிரளயம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணதாசன் மற்றும் பிரளயம்பாக்கம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றபின் வானவேடிக்கைகள் நடைபெற்று நிகழ்ச்சிக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.