திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்..!
திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்திருப்பதைக் கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பலராமன் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பெரியபாளையம் அருகே ஆரணியில் திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி. சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சியில் திமுக ஆட்சி பொறுப்பேற்றுடன் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு,கள்ளச்சாராயம் மரணங்கள், வீதிக்கு, வீதி கஞ்சா தெரு இருக்கு போதை தரக்கூடிய போதை மாத்திரைகள் அதிகரித்து வருவது. குறித்து அதிமுக சார்பில் நகரச் செயலாளர் தயாளன் ஏற்பாட்டில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பங்கேற்று ஆரணி கடைவீதிகளிலும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும், கடை வியாபாரிகளுக்கும் அதிமுகவின் அவலங்களை குறித்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினார்.அம்மா பேரவை செயலாளர் கே. என்.சீனிவாசன்,விவசாய பிரிவு செயலாளர் டில்லி, அவைத்தலைவர் சீனிவாசன்,தொழில் நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், துணைச் செயலாளர் துளசி,நகரத் துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், இளைஞரணி சீனிவாசன், கவுன்சிலர் தினேஷ், வார்டு செயலாளர்கள் ரவி,
விஸ்வநாதன்,லிங்க பாபு சம்பத், மோகன், ஏமந்த் முரளி, டில்லி,அமிதான், சுகுமார், சாஸ்திரி, விஸ்வநாதன்,சி.
வி.அசோக்,மகளிர் அணி மஞ்சுளா, ஜெயந்தி, சின்ன பொண்ணு, தொழில்நுட்ப பிரிவு சீனிவாசன். உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.