பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்.

ஒருகோடியே பதினேழு லட்சம் ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டு ஆறு மாதங்களாகியும் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை.

Update: 2023-05-25 03:00 GMT

பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகர்மன்ற துணைத்தலைவர் விஜயகுமார் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகர்மன்ற துணைத்தலைவர் விஜயகுமார் தவைமையில் அதிமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்.நகரில் மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கி இருப்பதாகவும் பாதாள சாக்கடை பணிகள் மந்த கதியில் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. கடந்த நவம்பர் மாதம் வீதிகளில் மின்விளக்குகள் அமைக்க ஒருகோடியே பதினேழு லட்சம் ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டது.ஆறு மாதங்களாகியும் மின்விளக்குகள் அமைக்கப்பட வில்லை. மேலும் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.இதனை கண்டித்து நகர்மன்ற தலைவர் விஜயகுமார் தலைமையில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் இன்று நகர்மன்ற அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

நகரில் மின்விளக்குகள் எரியாததால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியிருப்பதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக நகர்மன்ற துணைத்தலைவர் விஜயகுமார் குற்றம் சாட்டினார்.மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து நகர்மன்ற கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.  மாவட்ட ஆட்சியர் நகராட்சி ஆய்வுக்கு வந்தபோது அவரிடம் இந்த பிரச்னைகளை கூறியபோது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டும் எந்த பயனும் இல்லை என குறிப்பிட்டவர் மாவட்ட ஆட்சியர் அல்லது சார் ஆட்சியர் இங்கு வரும் வரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும் என துணைத்தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.


Tags:    

Similar News