பொன்னேரியில் 28 பேருக்கு எம்எல்ஏ துரை சந்திரசேகர் வீட்டுமனை பட்டா வழங்கினார்
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 28 பேருக்கு வீட்டுமனை பட்டாவை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.;
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 28 பேருக்கு வீட்டுமனை பட்டாவை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் நீண்ட நாட்களாக பட்டா வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர். அண்மையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரை நேரில் சந்தித்து பட்டா வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 28 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார். நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றித் தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு, பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். இதில், கோட்டாட்சியர் செல்வம், தாசில்தார் சுமதி, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.