புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கும் பணி, தொடங்கி வைத்த எம்எல்ஏ

ரெட்டம்பேட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ கோவிந்தராஜன் தொடங்கிவைத்தார்.;

Update: 2021-08-26 12:49 GMT

ரெட்டம்பேடு ஊராட்சியில் புதிய மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ கோவிந்தராஜன் தொடங்கிவைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு ஊராட்சியில் ரெட்டம்பேடு கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலாவதாக செய்து தரப்படும் என கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று புதிதாக 13லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜையை செய்து பணியை எம்எல்ஏ கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். . இதனால் அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News