கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-07-01 03:15 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம் ரெட்டிமேடு பகுதியில் வசித்து வருபவர் ரவீந்திரன்(32). விவசாயி. இவருக்கும் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை அருகே புது குப்பத்தை சேர்ந்த சங்கவி (25) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில்  வீட்டில் தனியாக இருந்த சங்கவி விவசாயத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த உறவினர்கள் சங்கவியை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சங்கவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் . இதுகுறித்து கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, கணவன் மனைவியிடையே சண்டையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் ஆகி மூன்று மாதமே ஆன பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News