பெரியபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முற்றுகை போராட்டம்

ஒன்றிய கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்

Update: 2023-04-20 05:30 GMT

 பெரியபாளையம் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியபாளையம் அருகே ஒன்றிய கவுன்சிலருக்கு மிரட்டல் விட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரியபாளையம் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம். மெய்யூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தேன்மொழி(47). இவர் பூண்டி ஒன்றிய 4.வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் அதே ஊராட்சி சேர்ந்த வேல்முருகன், மதனகுமார் ஆகியோர் கிடையே உள்ளாட்சி மன்ற தேர்தல் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை சரிவர செய்வதில்லை என்று வேல்முருகன் மற்றும் மதன்குமார் ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதனை அடுத்து கடந்த 14ஆம் தேதி அன்று ஒன்றிய கவுன்சில தேன்மொழி பணி நிமித்தமாக சென்றபோது அவரை வழிமறித்து எங்கள் மீது புகார் அளித்தால் உன்னை அழித்து விடுவோம் என்று மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. இதனை எடுத்து அன்று மாலை தேன்மொழி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் உடனடியாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேன்மொழி ஆதரவாளர்கள் மற்றும் தேன்மொழி ஆகியோர் பெரியபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. கணேஷ்குமார் அவர்களை அழைத்து இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அங்கு வந்த மெய்யூர் கிராம மக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.



Tags:    

Similar News