திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு
திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளை பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(55) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மோசஸ் (24) என்கிற அலெக்ஸ் ராஜ் என்பவருக்கும் ஏற்கனவே வீட்டுமனை வழி தகராறு இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், சண்முகம் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோசஸ் என்கிற அலெக்ஸ் ராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (50) ஜெய்சங்கர் (48) ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆரம்பாக்கம் காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் மீது தீ வைத்து எரித்து விட்டு தலைமறைவான 3 பேரை தொலைபேசி தேடி வருகின்றனர்.