லாரி பழுதாகி நின்றதால் தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை யில் மேம்பாலத்தில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து ஆந்திரா மட்டுமல்லாது வட மாநிலங்களுக்கு செல்வதும், வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய முக்கிய சாலையாக விளங்குவது சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை. நாள்தோறும் இந்த சாலையில் பல்லாயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கல்வி பயிலும் மாணவர்கள், அலுவலகம், தொழில், வணிக ரீதியாக செல்பவர்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இன்று காலை ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கனரக லாரி ஒன்று சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் மேம்பாலம் மீது திடீரென பழுதாகி நின்று விட்டது. சாலையின் ஒரு புறத்தில் லாரி பழுதாகி நின்றதால் சாலையின் இரு பக்கங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பழுதடைந்த லாரியை மேம்பாலத்திலிருந்து சாலையின் ஓரமாக அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து வாகனங்கள் தற்போது ஊர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. சுமார் 3 - மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வந்த போக்குவரத்து நெரிசல் மெல்ல சீரடைந்து வருகிறது.