கும்மிடிப்பூண்டி அருகே 3 சவரன் நகை திருட்டு: 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே 3 சவரன் நகை திருட்டு தொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-12-31 01:00 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (47). கடந்த மாதம் குடும்பத்தினர் வெளியூர் சென்று திரும்பிய நிலையில்,  வீட்டில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.  உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 3 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,  நேற்று கும்மிடிப்பூண்டி போலீசார் தேர்வழி கிராமத்தை சேர்ந்த குகன் (24),பாக்கியராஜ் (25),சூர்யா (23) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். 3 சவரன் நகை கொள்ளைடித்ததை அவர்கள்  ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் 3 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News