கோட்டக்கரையில் 60 வயது மூதாட்டியிடம் 10 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரை பகுதியில் 60 வயது மூதாட்டியிடம் 10 சவரன் தங்க சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2021-08-06 15:27 GMT
பைல் படம்

கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் தேவி (60) இவர் இன்று மாலை பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் அருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News