அரசுப்பேருந்தில் பயணியை நடத்துனர் காலால் எட்டி உதைத்த காட்சி வைரல்

கும்மிடிப்பூண்டி அருகே அரசுப்பேருந்தில் பயணியை நடத்துனர் காலால் எட்டி உதைத்த காட்சிகள் வைரல் ஆக பரவி உள்ளது.

Update: 2022-05-29 06:56 GMT

அரசு பஸ்சில் கண்டக்டர் பயணியை தாக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பொன்னேரியில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது பேருந்து தச்சூர் சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் நடத்துனர். தேவன் என்பவருக்கும் பயணி ஹரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இருவருக்கும் பேருந்தில் கைகலப்பு ஏற்பட்டு தாக்கி கொண்டு கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருதரப்பும் சமரசம் ஏற்பட்டு ஏற்கனவே சென்றுள்ளனர்.

இந்நிலையில் பேருந்தில் நடத்துனர் தேவன் பயணி ஹரியை தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.நடத்துனர் தேவன் பயணியை காலால் எட்டிஉதைத்தும் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News