பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50.க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-03-29 04:30 GMT

பெரியபாளையம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50.க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் உஷாராணி தலைமை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்பவும், தற்போது தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் இரண்டு வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் நலன் கருதியும் பணியாளர்களின் நலன் கருதியும் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு, கோடை விடுமுறை அளிப்பது போல் அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாத கால விடுமுறை அளிக்க  வேண்டும்.

மேலும் 10 ஆண்டுகள் பணி செய்து வரும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும், என 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.  இதில் ஒன்றிய தலைவர் கலைச்செல்வி, செயலாளர் சந்திரா, பொருளாளர் வினோதினி, துணைத் தலைவர் அம்பிகா, துணைச் செயலாளர் பொன்மணி ஆகியோர் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News